வலிகளின் வரிகள் - ரா. சுஜானந்த் பரத் (1st Year BA.LLB)

நம் அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் வலிகள் இன்றி நம் நாளை கழிப்பதில்லை. வசதி உள்ளார்,இல்லார் என எவருக்கும் இது விதிவிலக்கு அல்ல. இதனால் வாழ்க்கை வாழ வேண்டுமா என்ற எண்ணம் பலருக்கு உதிக்கிறது.வாழ்வு மீதான மன ஓட்டம் மாறி மறுவுகிறது.இதற்கு தீர்வு வெளியில் கூறினால் மாறிவிடும் என்று நினைத்து கூறினால்,அது பலவாறு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் என்ற அச்சம். இதனால் பல எண்ணங்கள் தோன்றி மன அழுத்தமாக மாறுகிறது. இந்நிலை கொடுதினும் கொடிது.இதற்கும் தீர்வு உண்டு.இதற்கான தீர்வை என் மேடைகளில் நான் சொல்லியதுண்டு. நரேந்திரன் என ஒரு சிறுவன் அச்சிறுவனுக்கு சிறுவயதிலிருந்து வாழ்வில் எதைப் பார்த்தாலும் பயம் காலை எழும்போதும் பயம், இரவு உறக்கத்திற்கும் பயம், உணவு உண்ணும் போதும் பயம்நீர் பருகும் போதும் பயம் என அச்சத்தால் அவன் வாழ்வு மூழ்கி இருந்தது, அச்சம் அவனை கழுத்தளவு சூழ்ந்து விட்டது,.அப்போது ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற குருவை சந்திக்கிறான். நரேந்திரன் அவரிடம் "குருவே எனக்கு வாழ்க்கையில் எதிர்பார்த்தாலும் அச்சமாக உள்ளது ஏதாவது உபாயம் கூறுங்கள்"என்றான். குரு அவனிடம், "நரேந்திரா நீ என்று அச்சம் நீங்கி தெளிவு பெறுகிறாயோ, அப்போது ஞானம் பெறுவாய்!சென்று வா!என்றார்.அந்நாள் முதல் தன் பயணத்தை தொடங்கினான். அவன் பட்ட வேதனைகளை சிந்தித்து வாடுகிறான். தன் இளம் பருவத்தை அச்சத்தால் கடந்து விட்டோம் என்று நினைத்தான். காஷ்மீரில் தொடங்கிய அவன் பயணம் குமரி முனையில் வந்து நிற்கிறான்.கடல் அலைகள் முன்னும் பின்னும்,மேல் கீழாக செல்கிறது.அதன் மத்தியிலே ஒரு பாறை உள்ளது.அதில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று எண்ணினான். அப்போது கடலாடிகள் படகை செலுத்தும் தருவாய்,இவன் அவரிடம் உதவி கேட்கிறான்.அவர்களோ இவனிடம் காலணா கேட்கிறார்கள். இவன் தன் அங்கிக்குள் கைவிட்டுப் பார்த்தான். பணம் இல்லை. அவர்கள் சென்று விட்டனர்.அப்போது சிந்தனை சிறகடிக்கும் வேளை.குரு சொன்னது நினைவுக்கு எட்டியது. துள்ளி எழுந்து கடலில் குதித்தார்.அலைகள் முன்னும் பின்னும் தத்தி தத்தித் தவழ்ந்து மூச்சை அடக்கி,பாறையில் ஏறி அமர்ந்தார். தியானம் செய்தார் அமரும் போது அவர் நரேந்திரன், எழுந்து வரும்போது அவர் விவேகானந்தர், என்று சொன்னால் அவர் பயத்தை கொன்று வாழ்வை வென்றவர். இவரே இன்று பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். இளைஞர்களுக்கு சேவை மனப்பான்மை ஊட்ட இவர் செய்த தொண்டு அளப்பரியது. அதனால் 1984 ஆம் ஆண்டு முதல் இவர் அகவைத் தினத்தை இந்திய அரசு தேசிய *இளைஞர் தினம்* என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


நூறு இளைஞர்களை கொடுங்கள்;இந்த பாரதத்தை உயர்த்தி காட்டுகிறேன்! - சுவாமி விவேகானந்தர்



வலிகள் கொடியதாக இருக்கலாம் ஆனால் அதைவிட நம் மனபலமே உயரியது. சிலவற்றைப் படிக்கும் போது சில புரிதல்கள் ஏற்படும் ஆனால் அவர்களிடத்திலிருந்து சிந்திக்கும்போது அவர்களின் பற்பல வேதனைகள் புரியும். அப்படித்தான் இந்த வழக்கும் என் நெஞ்சிற்கு எட்டியது.


கிளாஷ் கவ் நகராட்சி எதிராக  டெய்லர் (1922) (Glasgow Corporation vs Taylor)

இந்த வழக்கில் இந்நகராட்சி பொது பூங்கா ஒன்றை நடத்தி வருகிறது அப்பூங்காவிற்குள் ஒரு நச்சு மரம் வளர்ந்திருந்தது. அந்நகராட்சி அதை கண்டு கொள்ளவில்லை.அங்கு சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதில் ஒரு குழந்தை மழலை மொழியில் விளையாடிக் கொண்டு மரத்தின் உடைய பழத்தை உண்டு விட்டது. இதனால் அக்குழந்தை இறந்து விட்டது. நான் சிந்தித்துப் பார்க்கிறேன். ஒரு குழந்தை பழத்தை உண்டு விடும் என்ற நோக்கை அறியாமல் நகராட்சி செய்துவிட்ட அலட்சியத்தை எண்ணும் பொழுது எனக்கு அதிர்ச்சியை தாண்டி உணர்ச்சி பெருக்கெடுத்து ஊற்றாக ஓடுகிறது.


ஆனால் இது அந்த பிஞ்சு கரத்தின் உடைய நெஞ்சை உடைத்திறாமல் நஞ்சு பழம் என்று தெரியாமல் உண்டு விட்ட குழந்தையின் தவறா?


இதனால் பெற்றோரின் எண்ண அலைகள் என்னவென்று சிந்தித்துப் பார்க்கையில்! பெரு மழையில் சிக்கிய உயிர்களைப் போல வெள்ளத்தில் அடித்துக் கொண்டு செல்கிறார்கள்.ஆனால் காப்பாற்ற ஆளில்லாமல் அலறுகிறார்கள. அப்படி ஆள் வந்தாலும் அம் மழலை மீண்டும் வருமா?


காலம் கடந்த கடமைகள்-பெரும் காற்றுக்குப் பின் 

அமையும் சூழல் போலவே அமைகிறது


 வலிகளை கையாள்பவர்களே வரலாறு படைக்கிறார்கள்

 

 கண்களுக்கு தெரிவதே இல்லை கண்ணீரின் வலிகள்

 

 வலிகளின் வரிகள் கண்ணீரல்ல-அது வலிமையின் வழிகள்

 

      - ரா. சுஜானந்த் பரத்

நன்றிகள் பல!

Previous Post Next Post

Contact Form