யார் தலைவர் ??? - ஆ.மோனப்பிரியன் (1st LLB)

 அனைவருக்கும் வணக்கம் !!!
 
தலைவர் என்பதற்கு என்ன பொருள் ? ஒரு அமைப்பை, ஒரு குழுவை. ஒரு இயக்கத்தை, ஒரு சமூகத்தை, வழிநடத்துபவரை, தலைவர் என்று கூறலாம். அப்படியாக பார்த்தால் சங்க காலம் முதல் சமகாலம் வரை யாரெல்லாம் தலைவராக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் தலைவர் எப்படி இருக்க வேண்டும் ? என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் மிகவும் அவசியமாக தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் தான். அப்படிப்பட்ட இளைஞர்கள் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைக்கு கொள்கை கூட தெரியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கொடி பிடிப்பவர் மத்தியில் ஒரு நல்ல தலைவர் அமைய வேண்டும். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால்,


·

       மதங்களோடு மதங்களாகி உருவாக்கப்படுபவர் அல்ல தலைவர் மனிதத்தை மதங்களாக்கி ஆளப்படுபவர் தலைவர்!
 
·       ‘நான்’ என்ற சொல்லை குறிப்பவர் அல்ல தலைவர் 'நாம்' என்ற சொல்லில் உதிப்பவர் தலைவர்
ECL


 
·       நீதியும் வாய்மையும் பிறழாமல் நேர்மையும் ஒழுக்கத்தையும் புடை சூழ அமர்ந்திருப்பவர் தலைவர்.
 
·       குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் என்ற வள்ளுவரின் வாய்மொழியோடு, வாழ்ந்திருப்பவர் தலைவர்.


சமூகம் பற்றிய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். தவறு செய்பவர்களை தண்டிக்கக்கூடிய அல்லது திருத்தக்கூடிய இடத்தில் இருக்கும் பதவியாளர்களே இன்றைக்கு பெரும் தவற்றை செய்து வருகிறார்கள் என்பதுதான் வருத்தம் ஏன் இதை கூறுகிறேன் என்றால், யார் தலைவர் ? என்ற கேள்வியோடு என் கருத்தை தொடங்கியதற்கு காரணம் எதிர்காலத்தில் நீங்களாக கூட இதற்கு விடையாக இருக்கலாம். அப்படி இருக்கும் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் அறிந்து செயல்படுங்கள்!!!

 

காலமும்,

 

களமும்,

 

உங்கள் கையில் !!!

 

நன்றி!!! 

 ஆ.மோனப்பிரியன்

 ஈரோடு சட்டக் கல்லூரி

Previous Post Next Post

Contact Form