சிறகுகள் முளைக்காமல் பூமிக்கு வந்த தேவதைகள் குழந்தைகள்!
ஏ! மானுடா!
கள்ள மில்லாக் குழந்தையின் சிரிப்பைப் பார்த்த பின்னும் எப்படி உன்னால் அதை சீரழிக்க முடிகிறது?
அப் பெண்ணுறுப்பை பார்க்கும் போது அப் பெண்ணுறுப்பில் இருந்து தான் நீ வந்தாய் என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?
சில நேரம் யோசித்துப் பார்க்கும் பொழுது புரிகிறது....
ஆடை சுதந்திரம் பேசும் ஆண்களே..
உங்கள் கண்களில் ஆணவம் தெரிகிறதே
உங்கள் எண்ணத்தில் இங்கு பிழையிருப்பின் ..
பெண்களின் அணியும் ஆடைகளில் எங்கு குறை கண்டீர்..
இல்லை நமது என்னபல சமயம், சமூக ஊடகங்களினால் தூண்டப்படுகிறார்கள்!!
இதில் யாரை குற்றம் சொல்ல?
மனிதனாய் பார்த்து திருந்தாவிடில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே!??
Student of Law
- Priyadharsini.I