திருநங்கை -ஆ.மோனப்பிரியன் (1st LLB)

ஒருவரை சிறப்பிக்க வைத்திருப்பது திரு என்றால் நாங்கள் எங்கள் பெயருக்கு முன்னால் அதை வைத்திருக்கிறோம் எங்களுக்கு எங்கே சிறப்பு...???
 
எங்களை பார்த்தவுடன் இங்கே சிலருக்கு விலைப்பட்டியல் நினைவுக்கு வந்து விடுகிறது
 
ஆனால்
 
எங்களின் வினைப் பட்டியலை யாரும் நினைத்து பார்ப்பதில்லை...!!!!

 


இருப்பவர்களுக்குள்  பல சாதி பிரச்சனை எங்களுக்கோ இருப்பதற்கான ஒரு வீதி பிரச்சனை
 
இரவென்றால் தூக்கத்தை பலருக்கு கொடுத்த இறைவன் எங்களுக்கோ துக்கத்தையும் சேர்த்து கொடுத்திருக்கிறான்...
 
எங்களுக்கு சாதிக்குள் நீதி வேண்டாம் சாதிப்பதற்கான ஒரு வீதி வேண்டும்

Previous Post Next Post

Contact Form