வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் தங்கள் முடிவுகளை எடுக்கும் முன் அதன் இறுதி விளைவுகளை ஆழமாக சிந்திக்க வேண்டும். ஒரு செயலின் தொடக்கம் மட்டும் அல்ல, அதன் முடிவு என்னவாக இருக்கும், நடுவே என்னென்ன சவால்கள் உருவாகலாம், சூழ்நிலைகள் எவ்வாறு மாறக்கூடும் என்பதனை முன்கூட்டியே ஆராய்ந்து திட்டமிடுவது மிகவும் அவசியமானது. இன்றைய தேவையை மட்டும் கருதி எடுக்கப்படும் முடிவுகள் தற்காலிக நன்மையை தரலாம்; ஆனால் தொலைநோக்கு பார்வையுடன் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே நிலையான வெற்றியை அளிக்கும்.
இதனை விளக்கும் ஓர் ஈசாப்புக் கதை உள்ளது. தண்ணீர்
வற்றியதால் புதிய இடம் தேடி சென்ற இரண்டு தவளைகள், ஒரு கிணற்றில் தண்ணீர் இருப்பதை
கண்டன. உடனே குதிக்கலாம் என்று ஒன்று கூற, மற்றொன்று “நாளை இது வற்றினால் வெளியே வர
முடியுமா?” என்று சிந்தித்தது. இந்த சிந்தனையே தொலைநோக்கு பார்வையின் முக்கியத்துவத்தை
உணர்த்துகிறது.
ஆனால் இன்றைய சமுதாயத்தில் சில இளைஞர்கள் எதிர்காலத்தைப்
பற்றிய தெளிவான சிந்தனை இல்லாமல், அவசர உணர்விலும் வெளிப்புற தூண்டுதல்களிலும் சிக்கிக்
கொண்டு தவறான பாதையில் செல்கின்றனர், இதனால் இந்தியாவின் எதிர்கால தூண்கள் சிலர் சிறைச்சாலையில் தூங்கும் நிலைக்கு காரணம் போதைப்பொருட்கள், சாதி வெறி, பழிக்கு பழி என்ற மனப்பான்மையுடன் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து
வருகிறது. இக்குற்ற செயல்கள் தனக்கென புகழையும் , சமூக அந்தஸ்தை தரும் என்று கருதுவதும்
, குற்றச்செயல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதை ஒரு பெருமையாகக் கருதுவதும், இது
உண்மையில் கொல்லிக்கட்டையால் தன் தலையைத் தானே சொறிந்துகொள்வதற்கு ஒப்பான செயல் ஆகும்.
உண்மையான புகழ் , சமூக அந்தஸ்து,பெருமையாதெனில் கல்வி, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் திறமையின்
மூலம் உயர்ந்து மக்களுக்கும், சமூதாயத்திற்க்கும் சேவையாற்றுவதே ஆகும்.
எனவே, “முடிவு என்னவாக இருக்கும் என்பதை யோசிக்காமல்
எந்த காரியத்தையும் தொடங்காதே” என்ற உண்மையை மனதில் கொண்டு, தெளிவான சிந்தனை மற்றும்
தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால், நிச்சயம் நம் நேர்மறை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
“ஒருவன் தன் பலவீனத்தையும் தன் ஒழுக்கக் குறைவுகளையும்
மற்றவர்களிடம் வெளிப்படுத்தினால், அவன் அவர்களிடம் அடங்கி அவர்கள் வலையில் சிக்க வேண்டிய
நிலை ஏற்படும்.”
— சாணக்கியர்
ர.தமிழரசு (2nd LLB)
Student of law