சித்திரம் பேசுதடி – NATHIYA S (3rd Year LLB)

சோலை நகரத்து பைங்கிளியே !
என்ன நினைத்து உறங்கினாய்
விடிந்தால் விடுமுறை...
விளையாடலாம் என்றா !

மாமா, அண்ணா என்னும்

அன்போடு அழைத்தாயே !

ஒரு போதும் நினைத்தாயா ! அவர்கள்

உன் பிஞ்சு உடலை சிதைப்பார்கள் என்று ! 


நிம்மதியாக துயில் கொள் !
நீ கொஞ்சி விளையாடிய பொம்மைகளோடும்
உன் புத்தகப் பையோடும் !...





கவலை கொள்ளாதே ! இனி வரும் ஒரு சில நாட்களுக்கு
எங்கள் கை பேசியிலும்..
அண்டை வீட்டு சுவரிலும்..
உன் சித்திரம் மட்டும் பேசுமடி.. அதுவும்
உன் அடுத்த சகோதரி சிதையும் வரை...


எங்கள் மீது கோபம் கொள்ளாதே !
ஏனெனில் எங்களை பிடித்திருப்பது மறதி எனும்
மருந்தில்லா நோயே!...



இப்படிக்கு உன் சகோதரி,

- நதியா



Previous Post Next Post

Contact Form