வந்தே மாதரம் என்போம் - PRIYADHARSHINI I (3rd LLB)

 வந்தே மாதரம் என்போம் - இம்மண்ணைத் தொழுதே எழுவோம்


சதைப் பிண்டமென
இம்மண்ணில் வர
வலிபொறுத்து
ஏந்திக்கொண்டவள்
எனை ஈன்ற எந்தாயே!

 

சுதந்திரக் காற்றை நாளும்
உயிர் மூச்சோடு
கலந்திடச் செய்தவள் 
இந்நிலத் தாயே!

 

சக்தி கொண்ட சந்திரயான் நிலவைத் தொட்டதுபோல்
நம் தேசத்து செயற்கைக் கோள்கள்
பல விண்ணிலே.
இன்னும் பல பெருமை உண்டு
நம்தாய் மண்ணிலே.



 

அண்டை நாடுகள் யாவும் அணுவை பிளக்கும் முன்னே
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டும் நம் திருக்குறளைத் தந்தது இம்மண்ணே. ஆசியாவின் முதல் அணுஉலை 'அப்சரா' தந்ததும் இம்மண்ணே.
 
'எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்' எனப் பாடி மகிழ்ந்த பாரதியை தந்தது இம்மண்ணே.

 

இமயம் முதல் குமரிவரை
தங்கநாற்கரச் சாலை கொண்டாய்.
ஒற்றுமையாய் நம் மக்களை இணைப்பதில்
வெற்றியும் கண்டாய்.
 
இந்தியன் என்றே சொல்வோம்.
நெஞ்சை நிமிர்த்திக் கொள்வோம்.
 
வந்தே மாதரம் என்போம்.
இம்மண்ணைத் தொழுதே
இன்னும் இன்னும் உயர எழுவோம்.

 

சட்ட மாணவி - பிரியதர்ஷினி

Previous Post Next Post

Contact Form